என்வயது 16. ஒருபிரபலமான பள்ளியில் +1 படித்துவரும், பெண் நான். என் பிரச்னையை நினைக் கையில் எனக்கு அழுவதா, சிரிப்ப தா என்று புரியவில்லை.
படித்த, நன்மை- தீமை அறிந்த அடி முட்டாள் என்றுதான் என்னை கூற வேண்டும். என் குடும்பம் சற்று வசதி படைத்த குடும்பம். நான் பார்க்க அழகாகவே இருப்பேன். எங்கள் பள்ளி, இருபாலின ரும் படிக்கும் பள்ளி.
எங்கள் வகுப்பில், ஒரு மாணவன் இருக்கிறா ன். பார்க்க சுமாராக இருப்பான்; ஓரளவு நன்றா க படிப்பவன். நான் அவனை விடவும் நன்றாகப் படிப்பவள். என் கண் ணிற்கு மட்டும் அவன் ஆணழகனாகத் தெரிகிறான். இதை நினைத்தால் எனக் கே எரிச்சலாக இருக்கிறது.
என் வகுப்பில் உள்ள அத்தனை பெண்க ளுக்கும், அவனைப் பிடிக்காது; அவ னைப் பற்றி தவறான கருத்துகள் பலவற் றை என்னிடம் கூறி இருக்கின்றனர்.
அப்போதெல்லாம் நானே அவர்களுடன் சேர்ந்து அவனை ஏசியிருக்கிறேன். அதை யும்மீறி அவன்மேல் எனக்கு ஏதோ ஒரு பற்று.
அவனுடன் ஏற்கனவே ஆறு வருடங்க ளுக்கு முன் சேர்ந்து படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒழுக்க மானவனாகத்தான் இருந்தான்; நல்ல புத்திசாலியும்கூட. இப்பவும், அவன் புத்திசாலி தனத்திற்கு குறைவி ல்லை.
ஆனால், இப்போதோ, எந்த அழகிய பெண்ணைப் பார்த்தாலும் ஜொ ள் விடுவான். அலட்டல், இவன் பிறவிகுணம். ஆனால், அதையும் கூட என் மனம் ரசிக்கிறது.
அவனுடைய ஒவ்வோர் அசைவையும் என் மனம் ரசிக்கிறது. என் வகுப்பில், சில ஒழுக்க சீலர்களைத் தவிர, அத்தனை மாணவர்களு ம் இவன் பின்னால்தான்.
என்னைப் பார்த்து இவன் லிட்டர் கணக்கில் ஜொள் விட்டிருக்கிறா ன்; சத்தியமாக இது உண்மை. இவ்வளவு கீழ்த்தரமானவனை மனதில் வைத்திருக்கிறேனே… நானும்கூட கீழ்த்தரமானவள்தா ன்.
என்பெற்றோரும், அவன்பெற்றோ ரும், எங்களை குழந்தையாகத்தான் பாவித்து பள்ளிக்கு அனுப்பு கின்றனர். ஆனால், என் மனம் ஏன் இப்படி அவனிடம் அலை பாய்கி றது?
இந்த எண்ணத்தால், என் படிப்பு சற்று பின்தங்கி விட்டது. இருப்பினு ம், என்னால் இதைக்கட்டுபடுத்த முடியவில்லை. நான் இவனை விட, அழகான, ஒழுக்கமான ஆண்கள் எத்தனையோ பேரைக் கடந் துவந்திருக்கிறேன். ஏன், என் வகுப் பிலேயே இவனைவிட ஒழுக்கமான அழகான மாணவர்கள் இருக்கின்ற னர்.
ஆனால், அவர்களிடம்இல்லாத எதை நான் இவனிடம் கண்டு கொ ண் டேன் என்று, எனக்கே புரியவில்லை.
ஆனால், ஒன்று மட்டும் உறுதி… இது நான் என் பெற்றோருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். நான் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவதாக எண்ண வேண்டாம்; ஆனாலும், கூறுகிறேன்.
வருங்காலத்தில், எனக்கு ஒரு அன்பான கணவர் அமைகையில், “பள்ளி நாட்களில் உன் மன தை கண்டவனுக்குக் கொடுத் து அசுத்தம் செய்து விட்டாயே டி…’ என மனசாட்சி என்னை வாட்டி வதைக்குமே… அப்போ து நான் என்ன செய்வேன்… இதைப்பற்றி அவனிடம் பேசவு ம் எனக்கு வெட்கமாக உள்ள து. அதனால், அந்த யோசனை யை தயவு செய்து கூறாதீர்கள் அம்மா.
இந்த வயதில், பெண்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு ஆண் மீது, இதுபோல் உணர்ச்சிகள் எழுவது இயல்பே. இருப்பினும், எனக்கு இப்படிப்பட்ட ஒருவனிடமா இது வர வேண்டு ம்! பத்து மாதங்களாக, நானே எனக்கு எவ் வளவோ அறிவுரைகள் கூறிப் பார்த்தாயிற் று.
ஆனால், என்னால் என்னைத் திருத்திக் கொ ள்ள முடியவில்லை. எனவே நீங்கள் தான், என்னை உங்கள் சொந்த மகள் போல் பாவி த்து, அறிவுரை கூற வேண்டும்.
— இப்படிக்கு,
தங்கள் அறிவுரையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் மகள்.
அன்புள்ள மகளுக்கு—
உன் கடிதம் பார்த்தேன். நீயே எழுதியிருப்பது போல, உன் கடிதத்தை ப் படித்ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.
“படிக்கிற வயசில் இதுபோன்ற நினைப்பெல்லா ம் எதற்கு…’ என்று எல்லாரையும் போல நான் கூற மாட்டேன். ஏனென்றால், இந்த வய சில்தான் ஆர்வமும், எதையும் தெரிந்து கொள்ள வேண்டு ம் என்கிற உத்வேகமும் அதிகமாக இருக்கும். அதனால் தான் கல்வியை இந்த வயசில் விதை க்க முயற்சிக்கின்றனர்.
ஆனால், இந்த விதை முளைத்து துளிர் விட்டு மரமாக செழித்து வள ர்வதற்கு தடையாக, மனச்சலனம், ஆண்களி டம் ஈடுபாடு, உடல் உறவு பற்றிய எண்ணங்கள் போன்ற விஷ செடிகளும் கூடவே முளைக்கி றது. களைகளைப் பிடுங்கி எறிந்தால் தானே, நல்ல செடி செழித்து வளர முடியும்!
நான், அந்தப் பையனையும் கெட்டவன் என்று சொல்ல மாட்டேன். உன்னைப் போலவே அவ னும் சின்ன பையன்தானே… அவனுக்கும் வ யசு கோளாறு இருக்குமல்லவா! நீ பெண் என்பதால் இயல்பாக வே உள்ள மனக் கட்டுப்பாட்டினால் உன்னை வெளிக்காட்டி கொள் ளாமல் இருக்கிறாய்; அவன் துள்ளித் திரிகிறான்.
உலகத்தில் யாருமே நூறு சதவிகிதம் கெட்டவர்களும் இல்லை; நூறு சதவிகிதம் நல்லவர்களும் இல்லை கண்ணம்மா. மிகப்பெரிய துறவிகள் கூட, இதுபோன்ற எண்ண ங்களால் அலைக்கழிக்கப் பட் டிருக்கின்றனர்.
பெரிய மனிதன் என்ற போர்வைக்கு ள் இருக்கிற பலர், திருட்டுத்தன மாய் தங்கள் சபலங்களை வெளியே தெரியாமல் தீர்த்துக் கொண்டி ருக்கின்றனர்.
ஆனால், நீ ரொம்ப நல்ல பெண். உன் எண்ணங்கள் முழுமையாக உன்னை ஆட்கொள்ளாதபடி, உனக்கு நீயே சுய அலசல் செய்து கொண்டிரு க்கிறாய்.
“நீ செய்வது தப்பு’ என்று நான் உனக் கு எடுத்துக் கூற வேண்டிய அவசிய மே இல்லை. நாம் செய்வது சரியல்ல என்று உனக்கே தெரிந்தி ருக்கிறது. எனக்கு மிகவும் சந்தோஷம்.
இந்த வயசில், இந்த அளவுக்கு சிந்திக்கிற நீ, எதிர்காலத்தில், பெரிய புத்திசாலியாக, சாதனை படைக்கும் பெண்ணாக உருவாக முடியும். ஏனெனில், பல குழந்தைகளுக்கு தாங்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறோம் என் பதே தெரிவதில்லை.
ஆனால், கண்ணம்மா… எல்லாரு டைய வாழ்க்கையிலும், இளமை ஒருமுறைதான் வருகிறது. இந்த வயசில் படிக்க வேண்டியதை படி த்து, வெற்றிகளைக் குவித்துக் கொண்டே போனால் தான் எதிர்கா லத்தில் உன் பெயரையும், இந்த நாட்டின் சரித்திரம் சொல்லும்.
நான், என்னுடைய 25வது வயதில் சிந்தித்ததை நீ இந்த வயதிலேயே சிந்திக்கிறாய். உனக்கு என் வாழ்த்துகள்!
No comments:
Post a Comment