பெண்கள் இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா? - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 August 2017

பெண்கள் இரவில் உள்ளாடையுடன் உறங்குவது சரிதானா?

loading...

16-1502880287-5-333x250
பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என பலர் தெரிவித்துள்ளனர். உள்ளாடைகள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்துவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் உண்மையில் பெண்கள் உள்ளாடையுடன் தூங்குவதினால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா? உலவிவரும் இந்த கருத்து உண்மையா பொய்யா என்பது பற்றி இந்த பகுதியில் தெளிவாக பார்க்கலாம்.
புற்றுநோயை உண்டாக்குமா? இரவு நேரத்தில் பிராவுடன் தூங்குவதால் மார்பக புற்றுநோய் ஏற்படும் என்று பலர் தெரிவிக்கின்றனர். ஆனால் இரவில் உள்ளாடையுடன் தூங்குவதற்கும், மார்பக புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று என்றாவது யோசித்து உள்ளீர்களா? இரவில் உள்ளாடையுடன் தூங்குவதால், அந்த உள்ளாடை நிணநீர் மண்டலத்தை தாக்கி, அதில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இது புற்றுநோய் செல்களை தூண்டி, புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது.
நிராகரிக்கப்பட்டது இருப்பினும், உள்ளாடை அணிந்து பெண்கள் உறங்குவது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற காரணத்தை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆனது மறுத்துவிட்டது.
ஆய்வு மற்றொரு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியிலும் பெண்கள் இரவில் உள்ளாடை அணிந்து உறங்குவது, எந்த நேரமும் உள்ளாடை அணிந்தே இருப்பது போன்றவை எல்லாம் புற்றுநோயை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கட்டுக்கதை! மேலும் பெண்கள் உள்ளாடை அணிந்து உறங்குவது இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் என்ற கருத்து பரவலாக இருந்து வருகிறது. இந்த கருத்தும் தவறானது தான். ஆனால் இரவில் உறங்கும் போது மட்டுமல்ல, சௌகரியமான உள்ளாடை அல்லது இறுக்கமான உள்ளாடையை அணியாமல் இருந்தால், இரத்த ஓட்டம் தடைபடும். சௌகரியமான உள்ளாடையை எப்போது வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம்.
வலிகளை போக்கும்! நீங்கள் இரவில் சௌகரியமான, இறுக்கங்கள் இல்லாத உள்ளாடையை அணிந்து உறங்கினால், ஹார்மோன்கள் நல்ல முறையில் செயல்படும். மிருதுவாக உள்ள பிராக்களை தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம் ஒருசில மார்பக வலிகளில் இருந்து விடுதலை பெறலாம்.
நல்லதையே தேர்ந்தெடுக்க வேண்டும்! பொதுவாக பெண்கள் உள்ளாடைகளுக்கு அதிகம் செலவு செய்யமாட்டார்கள். தரமான உள்ளாடைகள் ஆரோக்கியமான மாற்றங்களை தரும். எனவே உறங்கும் போது சௌரியமான உள்ளாடைகளை பயன்படுத்துவது நல்லது. ஸ்போர்ட்ஸ் பிரா போன்றவற்றை உபயோகப்படுத்துவது சிறந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad