செக்ஸில் ஆண்கள் உச்சம் காண முடியாமல் போவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்! - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 16 June 2017

செக்ஸில் ஆண்கள் உச்சம் காண முடியாமல் போவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

loading...

அனார்கம்ஸியா (Anorgasmia) எனப்படுவது ஆண்கள் உடலுறவில் ஈடுப்படும் போதுஉச்ச உணர்வு எட்ட முடியாமல் போகும் பாதிப்பு. இதற்கு மனம் மற்றும் உடல் என இரண்டு ரீதியிலான காரணங்கள் காணப்படுகிறது.
இது ஆண், பெண் என இருபாலர் மத்தியிலும் ஆய்வு செய்து அறியப்பட்டுள்ளது. பெண்களை காட்டிலும் ஆண்கள் குறைவாக தான் இந்த அனார்கம்ஸியா சார்ந்த பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
ஆய்வுகளில் பத்து சதவீத ஆண்கள் இந்த உச்ச உணர்வை எட்டுவதில் பாதிப்பு இருப்பதை தெரிவித்துள்ளனர். சிலருக்கு இதனால் உடலுறவில் சீராக செயல்பட முடிவதில்லை என்று கூறியுள்ளனர்.
தொண்ணூறு சதவீத ஆண்களுக்கு மன ரீதியான காரணங்கள் தான் உடல் உறவில் உச்ச உணர்வு எட்ட தடையாக இருக்கிறது. பதட்டம், தனக்கு போதிய சக்தி இருக்கிறதா, தன்னால் சிறப்பாக உடலுறவில் ஈடுபட முடியுமா என ஆண்களுக்குள் அதிகம் எழும் சந்தேகங்கள், உள்ளுணர்வுகள் அவர்களது உடலுறவு வாழ்க்கையை பாதிக்கின்றது.
சிலருக்கு சிறு வயதில் ஏற்பட்ட அனுபவம், அதனால் தன்னால் இப்போதும் சரியாக உடலுறவில் ஈடுபட முடியாது என எண்ணுவது என மற்ற காரணங்களும் கூறப்படுகிறது. சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நபர்களும் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர்.
மருந்து, போதை, நாள்ப்பட உடல் வலி, உயர் இரத்த அழுத்தம், ஹார்மோனல் பிரச்சனை, நீரிழிவு, தண்டுவட பிரச்சனை, போன்றவை உடல் ரீதியான காரணிகளாக இருக்கின்றன.
தீர்வுகள் : அனார்கம்ஸியாவிற்கு தீர்வு காண அதற்கான சிறப்பு நிபுணர் / மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். முதலில் உடல் ரீதியான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
செக்ஸ் தெரபிஸ்ட் எனப்படும் உடலுறவு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு / சிகிச்சை அளிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
முதலில் அவர்கள் தேர்ச்சி பெற்றவர்களா? என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். இது போன்ற பிரிவுகளில் சில போலி டாக்டர்களும் உலாவுகின்றனர் என கூறப்படுகிறது.
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...