மனைவியிடம் பொய் சொல்லுங்க! சந்தோசமாக இருங்க!! - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Saturday, 17 June 2017

மனைவியிடம் பொய் சொல்லுங்க! சந்தோசமாக இருங்க!!

loading...

கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.
மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு ‘அதை’ப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான்.
ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள்.
அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...