குதவழி உடலுறவு ,விந்து பட்டால் உடலில் விந்துநீர் ஒவ்வாமையால் தோன்றும் எதிர்விளைவுகள் - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 16 June 2017

குதவழி உடலுறவு ,விந்து பட்டால் உடலில் விந்துநீர் ஒவ்வாமையால் தோன்றும் எதிர்விளைவுகள்

loading...
விந்து ஒவ்வாமை (அல்லது விந்து நீரின் அதிக உணர்திறன்) என்பது மனித விந்துவில் உள்ள புரதத்திற்கு ஒருவரின் உடலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் நிலையாகும். இதனை விந்தணு ஒவ்வாமை என்றும் குறிப்பிடுவர். இது ஒரு அரிய பிரச்சனையாகும். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் பெண்களுக்கே கணப்படுகிறது.

அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் (Symptoms and signs)
தோலில் விந்து பட்ட இடங்களில் நமைச்சல், எரிச்சல், சிவத்தல் போன்றவை விந்து ஒவ்வாமையின் சில அறிகுறிகளாகும். வழக்கமாக இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் இந்த அறிகுறிகள் ஏற்படும்.
சிலருக்கு, பொதுவான ஒவ்வாமை

விந்து ஒவ்வாமை என்பது மிக அரிய ஒரு பிரச்சனை. உடலுறவுக்குப் பிறகு நமைச்சல் அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று இருப்பதன் அடையாளங்களாகவே இருக்கக்கூடும். உடலுறவின்போது ஆணுறையைப் பயன்படுத்தினால், அறிகுறிகளுக்குக் காரணம் விந்து ஒவ்வாமையா அல்லது பெண்ணுறுப்பின் நோய்த்தொற்றா என்பதைக் கண்டறிந்துகொள்ளலாம். ஆணுறையைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளும்போது மட்டுமே அறிகுறிகள் தென்படுகிறது, ஆணுறையைப் பயன்படுத்தினால் இல்லை என்றால், அதற்கு விந்து ஒவ்வாமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கலாம்.
ஒரு பெண் முதல் முறையாக உடலுறவு கொள்ளும்போது அல்லது தனக்கு விந்து ஒவ்வாமை ஏற்படாத வேறு நபர்களுடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படுவதைக் கவனிக்கலாம். ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படலாம் ஆனால் வேறு நபருடன் உடலுறவு கொள்ளும்போது விந்து ஒவ்வாமை ஏற்படாமல் இருக்கலாம். நீண்ட நாள் துணைவருடன் உடலுறவு கொள்ளும்போது திடீரென்றும் ஏற்படலாம்.
நிர்வகித்தல் (Management)
விந்து ஒவ்வாமை அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் இருந்தால், மருத்துவரைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறவும். உங்களுக்கு விந்து ஒவ்வாமை உள்ளதா என்று கண்டறிய உங்கள் மருத்துவர் உதவுவார். உங்கள் மருத்துவர் ஒவ்வாமைக்கான சோதனைகளைச் செய்யலாம். இதைச் செய்வதற்கு மருத்துவர் உங்கள் துணைவரின் ஒரு துளி விந்தை எடுத்து ஓர் ஊசியின் மூலம் உங்கள் தோலில் தேய்ப்பார், அதன் பிறகு தோலில் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகிறதா என்று கண்டறியப்படும்.
ஆன்டிஹிஸ்டமைன்கள்: இவை ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளாகும். விந்து ஒவ்வாமைக்கு சிகிச்சையளிக்க இவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்
ஆணுறைகள்: விந்து உங்கள் மேல் படுவதைத் தடுக்க ஆணுறைகளைப் பயன்படுத்துமாறு மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
உணர்திறனைக் குறைக்கும் சிகிச்சை: அறிகுறிகளைத் தணிப்பதற்காக, ஒவ்வாமை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு உணர்திறனைக் குறைக்கும் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கலாம்.
குழந்தையின்மைப் பிரச்சனையை நிர்வகித்தல்: பொதுவாக விந்து ஒவ்வாமையால் மலட்டுத்தன்மைப் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. ஆனால் இதன் அறிகுறிகள் பெண்கள் கர்ப்பமடைவதைக் கடினமாக்கக்கூடும். உங்கள் துணைவரின் விந்துக்கு அதிகம் எதிர்விளைவு ஏற்படாதபடி செய்யக்கூடிய உணர்திறன் குறைப்பு சிகிச்சை எடுத்துக்கொண்டால் நீங்கள் இயற்கையாக கர்ப்பமடைய அது உதவியாக இருக்கும். விந்துவால் எதிர்விளைவுகள் ஏற்படும் பிரச்சனை கடுமையாக இருந்தால் அல்லது உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்தால், விந்துவிலிருந்து புரதங்கள் கழுவி அகற்றப்பட்ட பிறகு அந்த விந்துவை பெண்ணுறுப்பில் செயற்கை முறையில் செலுத்தும் முறை பயன்படுத்தப்படலாம் அல்லது செயற்கைக் கருத்தரிப்பு முறை பரிந்துரைக்கப்படலாம்.
குதவழி உடலுறவு என்றால் என்ன?
பிட்டம் (ஆசனவாய்) சம்பந்தப்பட்ட எந்தவொரு பாலியல் செயல்பாடும் குதவழி உடலுறவு அல்லது மலக்குடல் உடலுறவு எனக் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய உடலுறவில் பின்வரும் செயல்கள் செய்யப்படும்:
ஆசனவாயில் ஆணுறுப்பை நுழைத்தல்
ஆசனவாயில் செக்ஸ் பொம்மைகள் அல்லது விரல்களை நுழைத்தல் (சுய இன்பம்)
நாக்கு அல்லது வாயினால் ஆசனவாயைத் தூண்டுதல் (ரிம்மிங்)
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்கள் என்னென்ன?
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்கள் பின்வருமாறு:
ஆசனவாய் பாதிப்படைதல்: குதவழி உடலுறவால் ஆசனவாயின் அகவுறை எளிதில் சேதமடையக்கூடும்.குதவழி ஊடுருவல் ஆசனவாய் திசுக்களை கிழித்து, பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் மூலம் தொற்றை ஏற்படுத்தி அதை பாதிப்படையச்செய்யும். லூப்ரிகண்ட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் கிழிவதை தவிர்க்கலாம், இருப்பினும் எல்லா நேரத்திலும் கிழிவதைத் தடுப்பதில் அவை செயல்திறன் கொண்டவையாக இருப்பதில்லை.
ஆசனவாயின் சுருக்குத்தசை பாதிப்படைதல்: ஆசனவாயானது மலத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, அதில் வளையம் போன்ற ஓர் தசையமைப்பு உள்ளது அது மலத்தை வெளியேற்றிய பின்னர் மூடிக்கொள்ளும்.குதவழி ஊடுருவல் அதை சேதப்படுத்தும், மேலும் மலத்தைப் பிடித்து வைத்துக்கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
தீங்கு விளைவிக்கக்கூடிய நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்கள்: ஆசனவாய் முழுதும் பாக்டீரியாக்கள் உள்ளது.குதவழி உடலுறவானது அதில் ஈடுபடுபவர்களுக்கு நோய்த்தொற்றுகள் மற்றும் பால்வினை நோய்களை ஏற்படுத்தும். பின்வரும் பால்வினை நோய்கள் குதவழி உடலுறவின் மூலமாக எளிதில் பரவும்:
ஹெப்படைட்டஸ் B: இந்த வைரஸ் எச்சில், விந்து மற்றும் மலத்தில் காணப்படும். இது பாலியல் தொடர்புகள் மூலம் பரவுகிறது.
ஹெப்படைட்டஸ் A: வாய்க்குழி மலத்தால் மாசடையும்போது இது பரவலாம்.
ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (HSV): HSV1 மற்றும் HSV2 வைரஸ்கள், சிராய்ப்புகள் அல்லது அதிர்ச்சியினால் சேதமடையும் தோலின் மேல்புறச்செல் அல்லது சீதச்சவ்வு பரப்புகளில் எளிதில் உள்நுழையும்.
சிபிலிசு: பாதுகாப்பற்ற குதவழி உடலுறவால் எளிதில் இது பரவலாம்.
எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற குதவழி உடலுறவானது எச்.ஐ.வி பரவுவதற்கு முதன்மை காரணத்தில் ஒன்றாகும்.
ஹியூமன் பாப்பிலோமா வைரஸ், இனப்பெருக்க உறுப்பு மருக்கள், கொனோரியா, கிளமீடியா, ஹேமோபிலிசு டுக்ரீயி, சால்மோனெல்லா, ஷிகல்லா மற்றும் பிற குடல்நோய் தொற்றுகள் குதவழி உடலுறவுடன் தொடர்புடையதாகும்.
குதவழி உடலுறவும் கர்ப்பமும்
குதவழி உடலுறவால் கர்ப்பம் ஏற்படாது என்ற நம்பிக்கையில் பலரும் அதில் ஈடுபடுகின்றனர். எனினும், விந்து யோனியில் சிந்தி வேற்றுப்பாலின ஜோடிகளுக்கு கர்ப்பத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்களை எப்படித் தவிர்ப்பது?
பால்வினை நோய்கள் ஏற்படாமல் தடுக்க ஆணுறையைப் பயன்படுத்தவும்.
குதவழி உடலுறவிற்குப் பின் வாய்வழிப் புணர்ச்சி அல்லது இயல்பான உடலுறவில் ஈடுபட வேண்டுமெனில் புதிய ஆணுறையைப் பயன்படுத்தவும். எனினும், குதவழி உடலுறவின்போது உடைதல், கசிதல் மற்றும் நழுவுதல் போன்ற பாதிப்புகளால் ஆணுறைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
லேட்டக்ஸ் ஆணுறைகளைப் பயன்படுத்தும்போது நீர் சார்ந்த வழவழப்புப் பொருள்களை பயன்படுத்தவும்.
வலி அல்லது இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிட்டு, உங்கள் மருத்துவரை அணுகவும்.
குதவழி உடலுறவால் ஏற்படும் உடல்நலக் கெடுதல்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி அதில் ஈடுபடாமல் இருப்பதேயாகும்!
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...