கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள் - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 June 2017

கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்

loading...
18582314_629999983855182_8206604980495505398_n

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள்.
இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.
இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :
1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.
அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும்.
திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.
3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும்.
திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது – தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.
4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது.
இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.
5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.
– இவை எல்லாம் கள்ளத்தொடர்பு ஏற்பட காரணங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad