பெண்களின் உணர்ச்சி மொட்டு எப்படி தூண்டுவது ? - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 21 July 2017

பெண்களின் உணர்ச்சி மொட்டு எப்படி தூண்டுவது ?


loading...
பெண்களின் உணர்ச்சி மொட்டு என்பது என்ன? (What is the G-spot?)
பெண்களின் உணர்ச்சி மொட்டு (கிராஃபென்பெர்க்ஸ் ஸ்பாட்) பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் இருப்பதாகக் கருதப்படும் பாலியல் உணர்ச்சியையும் கிளர்ச்சியையும் மிகுதியாகத் தூண்டும் ஒரு பகுதியாகும்.

இது பெண்ணுறுப்புக் குழிக்கும் சிறுநீர்க் குழாய்க்கும் இடையே உள்ளது. பாலியல் கிளர்ச்சியைத் தூண்டுகின்ற இந்தப் பகுதியைத் தூண்டினால் பெண்களுக்கு மிகுந்த பாலியல் கிளர்ச்சியும் செறிவான புணர்ச்சிப் பரவசநிலையம் உண்டாகும் என்று கருதப்படுகிறது. சில பெண்களுக்கு, கிளிட்டோரிசைத் தூண்டுவதைக் காட்டிலும் இந்தப் பகுதியைத் தூண்டும்போதே புணர்ச்சிப் பரவசநிலை உருவாவதாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், இப்படி ஒரு பகுதி இருக்கிறதா இல்லையா என்பது இன்னும் விவாதப் பொருளாகவே உள்ளது. இப்படி ஒரு அமைப்பு உள்ளதா இல்லையா என்பது குறித்தும் அது எங்கு இருக்கிறது என்பது குறித்தும் மருத்துவர்கள் மற்றும் பாலியல் நிபுணர்களிடையே இன்னும் பல்வேறுபட்ட கருத்துகள் உள்ளன.

பெண்களின் உணர்ச்சி மொட்டு எங்குள்ளது (Where can I find the G-spot?)
வழக்கமாக, G-ஸ்பாட் என்பது பெண்ணுறுப்பின் முன்பக்கச் சுவரில் 50 முதல் 80 மிமீ தொலைவில் (2-3 அங்குலம்) உள்ளதாகக் கருதப்படுகிறது.
பெண்களின் உணர்ச்சி மொட்டு எப்படித் தூண்டுவது? (How to Stimulate the G-Spot?)
loading...
விரல்களைப் பயன்படுத்தித் தூண்டும் முறை: பெண்ணுறுப்புக்குள் இரண்டு விரல்களை நுழைத்து பெண்ணுறுப்பின் முன் சுவர்ப் பகுதியில் இருக்கும் G-ஸ்பாட்டைத் தூண்ட முயற்சிக்கலாம். உங்களுக்கு நீங்களே செய்துகொள்ள முயற்சிக்கிறீர்கள் என்றால், மல்லாந்து படுத்துக்கொண்டு இருக்கும்போது இந்தப் பகுதி மேல் நோக்கி இருக்கும்.

செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினால்:  பெண்களின் உணர்ச்சி மொட்டுத் தூண்டுவதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செக்ஸ் டாய்ஸ் உள்ளன. பெண்களின் உணர்ச்சி மொட்டு வைப்ரேட்டர் இதற்கு ஓர் உதாரணமாகும். இது ஆணுறுப்பின் வடிவில் இருக்கும், முனை வளைவாக இருக்கும். இதன் முனைப்பகுதி முன்பக்கமாக வளைந்து இருக்கும். இதனால் இந்த டாய் பெண்களின் உணர்ச்சி மொட்டு தூண்டுவது எளிதாகிறது.
நேரடியான உடலுறவில்: வழக்கமாக ஆண் மேலேயும் பெண் கீழேயும் படுத்து உடலுறவில் ஈடுபடும்போது ஆணுறுப்பால் G-ஸ்பாட்டைத் தூண்டுவது கடினமாக இருக்கலாம். ஏனெனில் இந்தப் பகுதியைத் தூண்ட, ஆணுறுப்பு சற்று சாய்ந்தபடி முன்செல்ல வேண்டும்.நாலுகால், அதாவது டாகி (நாய்) பொசிஷனில் உடலுறவு வைத்துக்கொள்வது பெண்களின் உணர்ச்சி மொட்டு த் தூண்ட ஏற்றதாக இருக்கலாம். இந்த பொசிஷனில், ஆண் பெண்ணுக்கு பின்புறம் இருந்துகொண்டு முன்பக்கமாக குனிந்துகொண்டு, பிட்டத்தை மேல்நோக்கி உயர்த்திக்கொண்டு உடலுறவில் ஈடுபடுவார். இதனால் ஆணுறுப்பு முன்னோக்கி வளைந்து G-ஸ்பாட்டை அடைவது எளிதாக இருக்கும்.

பெண் மேலே படுத்து உடலுறவில் ஈடுபடும்போது, ஆணுறுப்பை பெண்ணின் G-ஸ்பாட்டை நோக்கியபடி செலுத்தி, அதனைத் தூண்டும் வரை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் நகர்த்தலாம்
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...